உன்
விழிகளின் அசைவில்
வரைந்திட்ட ஓவியங்களும்
மௌன மொழியில்
அச்சிட்ட சிலைகளும்
நம் காதல்...
Wednesday, December 2, 2009
அம்மா...மீண்டும் என்னை சுமப்பாயா...
அம்மா.....
உன் கருவறையில்
மீண்டும் என்னை சுமப்பாயா...
உன் மடியில் தலை சாய்த்து
பொய்க் கதையின்
கனவுகளில்
கண்ணுறக்கம் எய்திட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
செல்ல கன்னம் கிள்ளி
நீ பதித்திடும் பாச முத்தத்தில் நனைந்திட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
ஒவ்வொரு மழலை சொல்லிற்கும்
நீ கூறிடும் ஓராயிரம் அர்த்தங்களை கேட்டிட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
சுகமான உறக்கங்களை ஈரைந்து
மாதங்களாவது பெற்றிட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
கருவில் கலைந்தாலும் - உன்
கனவுகளில் கலையாமல் வாழ்ந்திட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
உன் கருவறையில்
மீண்டும் என்னை சுமப்பாயா...
உன் மடியில் தலை சாய்த்து
பொய்க் கதையின்
கனவுகளில்
கண்ணுறக்கம் எய்திட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
செல்ல கன்னம் கிள்ளி
நீ பதித்திடும் பாச முத்தத்தில் நனைந்திட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
ஒவ்வொரு மழலை சொல்லிற்கும்
நீ கூறிடும் ஓராயிரம் அர்த்தங்களை கேட்டிட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
சுகமான உறக்கங்களை ஈரைந்து
மாதங்களாவது பெற்றிட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
கருவில் கலைந்தாலும் - உன்
கனவுகளில் கலையாமல் வாழ்ந்திட...
மீண்டும் என்னை சுமப்பாயா...
உன் புன்னகை.
பழுங்கினாள் வடித்த சிற்பம்
பார்க்கும் இடமெல்லாம் உனது உருவம்
கண்டோரை மயக்கும் கருவிழியால்
கண்டு மயங்கினேன் உன் புன்னகையால்...
பார்க்கும் இடமெல்லாம் உனது உருவம்
கண்டோரை மயக்கும் கருவிழியால்
கண்டு மயங்கினேன் உன் புன்னகையால்...
Subscribe to:
Posts (Atom)